Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஸ்கார் விருதுவிழா – டங்கிர்க்கு மூன்று விருதுகள்!

In சினிமா
Updated: 04:50 GMT, Mar 5, 2018 | Published: 04:50 GMT, Mar 5, 2018 |
0 Comments
1103
This post was written by : Velauthapillai Kapilan

90-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டங்கிர்க்’ படம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல்லும், சிறந்த துணை நடிகையாக ஆலிசன் ஜேனியும் (ஐ, டோன்யா) பெற்றுள்ளனர்.

இந்த விழாவில் ஹொலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த ‘எ பென்டாஸ்டிக் வுமன்’ என்ற திரைப்படம் கைப்பற்றியுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக கோகோவும், சிறந்த அனிமேஷன் குறும்படமாக டியர் பாஸ்கட்பால் படமும் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.

தி ஷேப் ஒஃப் வோட்டர் படத்திற்கு சிறந்த தயாரிப்பு மற்றும வடிவமைப்பு விருது கிடைத்திருக்கின்றது. இதுதவிர, ஆடை வடிவமைப்புக்கான விருதை பாண்டம் த்ரெட் படமும், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை டார்க்கஸ்ட் ஹார் படமும் வென்றுள்ளன. அதுமட்டுமின்றி சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை ஐகரஸ் படம் பெற்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியை, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகின்றார்.

சிறந்த இயக்குனர் – Best director

சிறந்த நடிகை – Best actress

சிறந்த நடிகர் – Best actor

சிறந்த அசல் பாடல் – Best original song

சிறந்த ஒளிப்பதிவு – Best cinematography

சிறந்த அசல் திரைக்கதை – Best original screenplay

சிறந்த திரைக்கதை – Best adapted screenplay

சிறந்த திரைப்பட எடிட்டிங் – Best film editing

சிறந்த காட்சி விளைவுகள் – Best visual effects

சிறந்த அனிமேஷன் அம்சம் – Best animated feature

சிறந்த குறுகிய அனிமேஷன் – Best animated short

சிறந்த துணை நடிகை – Best supporting actress

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Best production design

சிறந்த ஒலி  – Best sound editing

சிறந்த ஆவணப்படம் – best documentary feature

சிறந்த ஆடை வடிவமைப்பு – Best costume design

ஒப்பனை – Makeup and hairstyling

சிறந்த துணை நடிகர்   – Best supporting actor

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg