Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பின் ஆண் – பெண் அணிகள் முதலிடம்

In டெனிஸ்
Updated: 10:10 GMT, Mar 5, 2018 | Published: 07:42 GMT, Mar 5, 2018 |
0 Comments
1159
This post was written by : poovannan

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பூப்பந்தாட்ட போட்டியானது, மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கத்தின் உள்ளக அரங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆண் – பெண் விளையாட்டு அணியினர் வருகைதந்திருந்தனர்.

குறித்த போட்டியின் இறுதிச்சுற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் – பெண் ஆகிய இரு அணியினரும் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் தெரிவித்தார்.

இப்போட்டியில் அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg