Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் நீர்விநியோகத்தில் தடங்கல்

In
Updated: 07:36 GMT, Mar 5, 2018 | Published: 07:36 GMT, Mar 5, 2018 |
0 Comments
1172
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளில்; நீர்விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாத்திரம் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் நீர்விநியோகமின்றி சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

லண்டன், மிட்லான்ட்ஸ், வேல்ஸ், ஸ்கொட்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீர்விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, லண்டனில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை அதிகளவில் இடம்பெறுகின்றன.

மேலும், நீர்விநியோகத்தில் தடங்கல் காணப்படும் பகுதிகளிலுள்ள மக்கள் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நீர்க்குழாய்களில் கசிவு மற்றும் குறைந்த அழுத்தம் காரணமாக நீர்விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக, நீர்விநியோகக் கம்பனிகள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg