Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிதர்கள் ஒத்திசைந்து வாழவில்லையெனில் அழிவுகள் அதிகரிக்கும் -கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர்

In இலங்கை
Updated: 08:26 GMT, Mar 5, 2018 | Published: 08:19 GMT, Mar 5, 2018 |
0 Comments
1094
This post was written by : poovannan

மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழவில்லையெனில் அழிவுகள் அதிகரிக்கும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.

சமீபகாலத்தில் சகவாழ்வுக்கான சூழ்நிலைகள் குழப்பப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவர் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மனிதர்கள், மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்வதற்கான அறிவுச் செயற்பாடு என்பது உன்னத எதிர்பார்ப்பு. நாம் இன மத வேறுபாடுகளுக்கப்பால் சேவையாற்றி வந்த அறிவு முறைகள், உயர்கல்வி மரபுக்குள் உள்வாங்கப்பட்டு கல்வி மரபுக்குள் கொண்டு வருவதுடன் சமூக உருவாக்கங்களுடன் எமது வாழ்க்கை முறை வடிவமைக்கப்படவேண்டும்.

மேற்படி அறிவுமுறைமைகள் வாய்மொழி மூலமான அனுபவ அறிவுப் பகிர்வுக்கு உரியதாகவும் ஏடுகளில் எழுதப்பெற்று பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வருபவையாகவும் மிகப் பெரும்பாலும் காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்படி அறிவுமுறைகளைக் கையாளுவதற்கு அவசியமான அறிவும் பயில்வும் தேவைப்படுகின்றது.

வாய்மொழி அறிவுத் திறன்களை அறிவதுடன் அதை புதிய ஊடகங்களுக்கு கொண்டு வருதல், கிரகித்தல் மற்றும் நினைவில் வைத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி இங்கு அவசியமாகின்றன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg