Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டணி அரசாங்கம்: ஜேர்மன் அதிபருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வாழ்த்து

In ஐரோப்பா
Updated: 08:46 GMT, Mar 5, 2018 | Published: 08:46 GMT, Mar 5, 2018 |
0 Comments
1092
This post was written by : Suganthini

ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தலைமையில் புதிய கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்ப நிலைமை காணப்பட்டதுடன், அந்நாட்டில் அரசியல் முட்டுக்கட்டைக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், அதிபர் அங்கேலா மெர்கல் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க சோசலிஸ ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்களித்தனர்.

தலைநகர் பேர்லினிலுள்ள கட்சித் தலைமையலுவலகத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பில், 66.02 சதவீத வாக்குகள், அதிபர் அங்கேலா மெர்கல் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கக் கிடைத்துள்ளன.

இந்த முடிவு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறந்த செய்தியென்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய திட்டங்களை முன்னெடுக்க ஜேர்மனியும் பிரான்ஸும் இணைந்து செயற்படுமெனவும், பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg