Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயிர்களை பாதுகாக்க யானை வேலிகளை அமைத்துதருமாறு கோரிக்கை!

In இலங்கை
Updated: 10:10 GMT, Mar 5, 2018 | Published: 10:10 GMT, Mar 5, 2018 |
0 Comments
1089
This post was written by : Anojkiyan

முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் தென்னைப்பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு யானை வேலிகளை அமைத்துதருமாறு தெங்கு அபிவிருத்தி சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெங்கு பயிர்செய்கை அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “விசுவமடு, றெட்பானா, தொட்டியடி, போன்றபகுதகளில் தென்னைப்பயிர்செய்கையை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தெங்குப் பயிர்செய்கையானது அதிக வருமானத்தைத்தரக்கூடிய பயிராகக்காணப்படுகின்றது. மேற்படி, பிரதேசங்களில் யானைகளால் பெருமளவான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது இந்தப்பகுதிகளில் தென்னை நாற்றுக்கள் விநியோகிப்பதை நிறுத்தியிருக்கின்றோம்,

இந்தப்பகுதிகளில் தெங்குப்பயிர்செய்கையை ஊக்குவிக்கவும் தென்னைகளைப் பாதுகாக்கவும் யானைவேலிகள் அமைக்கப்பட வேண்டும். இதனை வனஜீவராசிகள் திணைக்களம் வனவளத்திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg