Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைந்து செயற்பட்டாலே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்: முதலமைச்சர்

In இந்தியா
Updated: 11:11 GMT, Mar 5, 2018 | Published: 11:11 GMT, Mar 5, 2018 |
0 Comments
1108
This post was written by : Kemasiya

மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டால் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆளுநர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தம் உரையாற்றிய அவர்,

“சட்ட ஒழுங்கு மீறல்கள் இடம்பெறுவதை அறிந்தால் அவற்றை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.

கிராமம் மற்றும் நகரப் புறங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகள்,  சட்டமீறல்கள் இடம்பெறுவதை அறிந்தால் அதை தம்முடைய முதல் பணியாக எண்ணி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் அனைவரும் செயற்பட வேண்டும்.

தேசிய மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் நபர்கள்,  அமைப்புக்கள் மீது உடனுக்குடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பயங்கரவாதம்,  மதவாதங்களில் இருந்த மக்களை பாதுகாப்பதற்கு நல்லிணக்கத்தை நிலைநாட்டும் கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும்” என குறித்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களின் பின்னர் குறித்த மாநாடு இன்று இடம்பெற்றுள்ளது. இதில் 32ஆளுநர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள்,  அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg