Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடைச் சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

In இலங்கை
Updated: 11:17 GMT, Mar 5, 2018 | Published: 11:17 GMT, Mar 5, 2018 |
0 Comments
1071
This post was written by : Yuganthini

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடுமாறு, பிரதான சாட்சியாளரான சுதேஸ் நந்திமாலால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறிந்த சம்பவம் தொடர்பில்  தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால், மனுவை விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லையென, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன், நீதவான் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிபதி அவரது கருத்தினை ஏற்றுக்கொண்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg