Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவேண்டிய தருணம்!

In இன்றைய பார்வை
Updated: 12:12 GMT, Mar 5, 2018 | Published: 12:12 GMT, Mar 5, 2018 |
0 Comments
1487
This post was written by : Arun Arokianathan

 

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டத்தின் பதற்றம் முற்றாக தணிவதற்குள் தற்போது கண்டியின் திகண, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெறியாட்டம் கொழுந்துவிட்டெரிந்துள்ள புகைப்படங்களைப் பார்க்கையில் இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான அச்சம் ஆட்கொள்வதைத்தவிர்க்க முடியாது.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி எங்கே போய்விட்டது ?. காட்டாட்சி தலைவிரித்தாடுகின்றதா ?என்ற கேள்விகள் சாதாரணமக்களின் மனங்களில் எழுவதைத்தடுக்க முடியாது.

“துரதிஷ்டமான சம்பவம் ஒன்றினால் சிங்கள சகோதரர் ஒருவர் மரணித்துள்ள பின்னணியில், அதை காரணமாக கொண்டு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சில வீடுகள் பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்டு , தீவைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களை மையப்படுத்தி இனக்கலவரமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் இனவாத சக்திகள் அங்கு ஒன்றுசேர்ந்துள்ளன
இந்த பதற்றநிலையைத் தொடர்ந்து, இன்று (05) பிற்பகல் 4 மணி முதல் நாளை (06) காலை 6 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போதைக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.”  என முஸ்லிம் காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றங்கள் நிகழ்வும் போது இனம், மதம் என்றோ ,உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றோ பாராது உடனடியாக உரிய நடவடிக்கைகளை கடந்த காலத்தில் எடுக்கத்தவறியதன் விளைவே, சட்டத்தை மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக சில அமைப்புக்களும் கும்பல்களும் செயற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த இனவாதத் தீ மேலும் பரவி நாட்டையே எரிக்குமுன்பாக அரசியல் சுயலாபங்களைப் பாராது குற்றவாளிகளைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரத்திலுள்ளவர்கள் உடனே முன்வரவேண்டும். தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் மீதான நம்பிக்கையை விரைந்திழக்கவைப்பதாக அமைந்துவிடும்.

 

 

கண்டியில் வன்முறைகள் பதற்றநிலை தொடர்பாக டுவிட்டரில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களும் தகவல்களும் பின்வருமாறு:

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg