Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திகனயில் வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு: பொலிஸார் குவிப்பு

In இலங்கை
Updated: 11:38 GMT, Mar 5, 2018 | Published: 11:38 GMT, Mar 5, 2018 |
0 Comments
1758
This post was written by : Varshini

கண்டி – திகன நகரிலுள்ள பல வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டி தெல்தெனிய பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு இனக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, நேற்றிரவு 24 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் மோதல் வெடித்ததோடு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், திகன நகரில் பல விற்பனை நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg