Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் வந்த பூனையை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

In
Updated: 11:57 GMT, Mar 5, 2018 | Published: 11:57 GMT, Mar 5, 2018 |
0 Comments
1222
This post was written by : Kemasiya

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் கேரளாவிற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட பூனையை விமானத்தள அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த பூனையை எந்த ஆவணங்களும் இல்லாமல் அவர்கள் கொண்டு வந்ததால், அந்த பூனையை கையகப்படுத்தி மீண்டும் சவுதிக்கு அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.

சவுதியில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த தம்பதியினரே குறித்த சவுதிப் பூனையை கேரளாவில் உள்ள தமது சொந்த வீட்டில் வளர்ப்பதற்கு அழைத்து வந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து செல்ல பிராணிகள் கொண்டு வருவதாக இருந்தால், இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் வழியாகத்தான் கொண்டு வரவேண்டும்.

இங்குதான் பிராணிகளை சோதனை செய்யும் அறைகளும், அதிகாரிகளும் உள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து பிராணிகளை இங்கு கொண்டு வர உரிய ஆவணங்களும் இருக்க வேண்டும்.

குறித்த ஆவணங்கள் இல்லாதமையினாலேயே இந்தப் பூனை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg