Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைந்த வட – கிழக்கிலேயே வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கலாம் -கோ.கருணாகரம்

In இலங்கை
Updated: 04:58 GMT, Mar 6, 2018 | Published: 04:58 GMT, Mar 6, 2018 |
0 Comments
1089
This post was written by : poovannan

இணைந்த வட – கிழக்கில் சமஷ்டி தீர்வினைப்பெற்று தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதையே நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உணர்த்தி நிற்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பகுதியில் உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு கதிரைகள் வழங்கிவைக்கும் நிகழ்வில் நேற்று (திங்கட்கிழமை) மாலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், “இணைந்த வட – கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் மக்களின் அனைத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் கிழக்கில் முஸ்லிம் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்காலத்தில் வரவுள்ள புதிய அரசியல் யாப்பின் உருவாக்கத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். இணைந்த வட – கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையினை நாங்கள் பேசி தீர்மானிக்கவேண்டும் என்பதையே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற செய்தியை அம்பாறை தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நின்ற சில நாட்களிலேயே, அட்டப்பள்ளத்தில் தமிழர்களின் மயானக்காணி அபகரிக்கப்படுகின்றது என்றால் இது தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையை உங்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான மாதர் அபிவிருத்தி சங்கங்க உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg