Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் நம்பிக்கைக்கு காலம் பதில் சொல்லும்: தமிழிசை

In இந்தியா
Updated: 06:48 GMT, Mar 6, 2018 | Published: 04:39 GMT, Mar 6, 2018 |
0 Comments
1159
This post was written by : Kemasiya

தமிழகத்தில் இருக்கும் அரசியல் வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியுமென ரஜினிகாந்த் நம்புகிறார். ஆனால் மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழிசை, எம்.ஜி.ஆர் இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்ற ரஜினிகாந்தின் உறுதி மொழி குறித்து பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“எல்லோருடைய எண்ணமும் மக்கள் நலனாகத்தான் இருக்க முடியும். அவரவர்கள் பணியை அவரவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் ஒவ்வொரு விதமாக நாடவேண்டியுள்ளது. எனவே எல்லோரும் தங்களுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் தலைவர்கள் பணிபுரியாமல் இருக்கிறார்கள் என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எமக்கு கிடைக்காமல் இருக்கலாம். காரணம் திரைப்படத்துறையில் இருக்கும் வாய்ப்பு அதிகம்.

எனினும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றதென  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்”  இவ்வாறு குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில்   தமிழிசை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg