Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க.யினால் பிரதமருக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட மாட்டாது: வசந்த

In இலங்கை
Updated: 05:52 GMT, Mar 6, 2018 | Published: 05:51 GMT, Mar 6, 2018 |
0 Comments
1115
This post was written by : Anojkiyan

ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ள கூறப்படுகின்ற நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒன்றிணைந்த எதிரணி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருமாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை அதற்கு வழங்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது அதில் அடங்கியுள்ள விடயங்களை அவதானித்ததன் பின்னரே தீர்மானிக்கப்படும்.

அத்துடன், வேறு ஒரு குழுவினால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதாயின் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஐ.தே.க குழுவினருடன் கலந்துரையாடவும் வேண்டும். கட்சிக்குள் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியான தீர்வுத் திட்டங்கள் எட்டப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg