Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருதமுனையில் டயர்கள் எரிப்பு :பேருந்துகள் மீது கல் வீச்சு :போக்குவரத்து முடக்கம்

In
Updated: 07:47 GMT, Mar 6, 2018 | Published: 07:44 GMT, Mar 6, 2018 |
0 Comments
1318
This post was written by : poovannan

மட்டக்களப்பில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மருதமுனை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கான பேருந்து போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.

மேலும் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பேருந்துகள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

இதேவேளை மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டது.

அத்துடன் அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர். இதனால் இப்பிரதேசங்களிலுள்ள அரச – தனியார் காரியாலயங்கள், வங்கிகள், பாடசாலைகள் ஆகியன இயங்காத நிலையில், வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டிருந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg