Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி மேலாண்மை வாரியம் – ஸ்டாலினுடன் பேசிய பின்னர் முதல்வரின் முடிவு

In இந்தியா
Updated: 08:16 GMT, Mar 6, 2018 | Published: 08:16 GMT, Mar 6, 2018 |
0 Comments
1150
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் மத்திய அரசு நடத்தவுள்ள கூட்டத்தில் அரச செயலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரமே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“மத்திய அரசு எதிர்வரும் (மார்ச்) 9ஆம் திகதி காவிரி மலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் பொது ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

குறித்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அரச செயலாளர்களை பங்குபற்ற செய்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னரே குறித்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் பேசுவதற்கு குறித்த விவகாரத்துடன் சம்மந்தமுடைய நான்கு மாநிலங்களையும் வருமாறு நீர்வளத்துறை அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு மேற்படி முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg