Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசரகால நிலையை அடுத்து ஆயுதம் தாங்கிய படையினர் களத்தில்!

In இலங்கை
Updated: 13:15 GMT, Mar 6, 2018 | Published: 12:01 GMT, Mar 6, 2018 |
0 Comments
1798
This post was written by : Varshini

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 7 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இன்று அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

தெல்தெனிய இளைஞனின் மரணத்தின் பின்னர், அதனை அண்டிய திகன மற்றும் பல்லேகல உள்ளிட்ட பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை வெளியான தகவல்களின் பிரகாரம், 37 வீடுகள், 46 கடைகள் மற்றும் 35 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர், ராணுவத்தினர் மற்றும் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg