Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்கா, சீனா பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 05:56 GMT, Mar 7, 2018 | Published: 00:49 GMT, Mar 7, 2018 |
0 Comments
1184
This post was written by : Arun Arokianathan

இலங்கையில் இன வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து வல்லரவுகளான அமெரிக்காவும் சீனாவும் தத்தம் பிரஜைகளுக்கு அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில் ”இன வன்முறைகள் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. கண்டி நிர்வாக மாவட்டம் உள்ளடங்கலாக சில பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் நாட்களில் மேலும் சம்பவங்கள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. மேலதிக விபரங்களுக்கு உள்ளுர் ஊடகங்களை அவதானியுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனத்தூதரக அதிகாரியொருவரிடம் இலங்கை தொடர்பாக ஏதேனும் அறிக்கைகளை விடுத்துள்ளீர்களா என வினவியபோது தமது சீனப்பிரஜைகளுக்கு அவதானமாக நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆதவனுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக இன வன்முறைச்சம்பவங்கள் காரணமாக அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து அடுத்து அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதரங்கள் அறிக்கைகளை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

‘சட்டம், மனித உரிமைகள், மற்றும் சமத்துவம் ஆகியவை இனங்களின் அமைதியான சகவாழ்வுக்கு இன்றியமையாதவை.

குறுங்குழுவாத வன்முறைக்கு எதிராக இலங்கை அரசு விரைந்து செயற்பட்டு, மத சிறுபான்மையினரையும், அவர்களது வழிபாட்டிடங்களையும் பாதுகாக்க வேண்டும்.

அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைக் காப்பாற்றுவதோடு வெகுவிரைவிலேயே நாட்டின் அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம்’ என அமெரிக்கத் தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இலங்கைக்கான பிரித்தானித் தூதுவர் ஜேம்ஸ டோரிஸ் தமிழில் தனது டுவிட்டர் பதவில்

எனக் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg