Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணுசக்தி சோதனையை கைவிடுவதை வடகொரியா உறுதிப்படுத்த வேண்டும்: ஜப்பான்

In உலகம்
Updated: 04:55 GMT, Mar 7, 2018 | Published: 04:55 GMT, Mar 7, 2018 |
0 Comments
1229
This post was written by : Elakkiya

அணுசக்தி ஏவுகணை வளர்ச்சி முழுமையாக கைவிடப்படும் என்பதை வடகொரியா தனது உறுதியான நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என ஜப்பானிய அமைச்சரவை தலைமைச் செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மீள் புதுப்பிக்க முடியாத அளவில் வடகொரியா தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “வடகொரியாவுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் அதன் அணுவாயுதமயமாக்கலுக்கு தீர்வைத் பெற்றுத் தரவில்லை. எனவே எங்களுடைய பதில்கள் கற்றுக் கொண்ட பாடங்களிலேயே இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை. நாம் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை மேற்கொண்டால் வடகொரியா அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதையும் மீள முடியாதது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்காக வடகொரியா மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் கொள்கைகளை கொண்டுவர வேண்டும் என்றும் இதற்காக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிற நாடுகளுடன் ஜப்பான் ஒத்துழைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg