Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இந்தியா!

In விளையாட்டு
Updated: 05:01 GMT, Mar 7, 2018 | Published: 05:01 GMT, Mar 7, 2018 |
0 Comments
1087
This post was written by : Litharsan

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணத்துக்கான ஹோக்கி தொடரில் அவுஸ்ரெலியாவுக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்தது.

ஆறு நாடுகள் விளையாடிவரும் குறித்த ஹொக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று ( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தியா மற்றும் அவுஸ்ரெலியாவுக்கிடையிலான போட்டியில் இந்தியா 2-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் ஆர்ஜென்டீனாவிடமும், இங்கிலாந்திடமும் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையிலேயே இறுதிப் போட்டிக்கான தகுதியை இந்தியா இழந்துள்ளது.

அத்துடன் நாளை நடைபெறவுள்ள மலேசியாவுக்கெதிரான போட்டியில் இந்தியா விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg