Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் எழுபத்தைந்து கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

In இலங்கை
Updated: 09:19 GMT, Mar 7, 2018 | Published: 09:19 GMT, Mar 7, 2018 |
0 Comments
1067
This post was written by : poovannan

யாழில் எழுபத்தைந்து கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் இன்று (புதன்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் யாழ். சுழிபுரம் வீதியில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்த எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

முப்பத்து இரண்டு சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த கஞ்சா கடத்திச்செல்லப்பட்டிருந்தது. விற்பனை செய்யும்நோக்கில் அவற்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg