Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் தொடர்புக்கான வயதெல்லையில் மாற்றம்: பிரான்ஸில் புதிய சட்டம்

In ஐரோப்பா
Updated: 09:30 GMT, Mar 7, 2018 | Published: 09:29 GMT, Mar 7, 2018 |
0 Comments
1072
This post was written by : Elakkiya

பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களுடனான பாலியல் தொடர்பு கற்பழிப்பாக கருதப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி பாலியல் ஒப்புதலுக்கான வயதை 15 ஆக பிரான்ஸ் உறுப்படுத்தியுள்ளது.

சட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த சட்டத்தை பிரான்ஸ் சமத்துவ அமைச்சர் மர்லின் ஸ்கியாப்பா வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் 15 வயதுக்கு உட்பட்டோருடனான பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவை கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப எதிர்வரும் வாரங்களில், பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான ஏனைய சட்டங்களின் ஒருபகுதியாக புதிய வயது எல்லை சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், பாலியல் வழக்கு ஒன்றில், வன்முறை அல்லது நிர்பந்தம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் வழக்கு, பாலியல் துஷ்பிரயோகமாக கருதப்பட்டு குற்றவாளிகளுக்கு சிறிய தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 75 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும்.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் சட்டமூலத்தின் பிரகாரம், விரும்பியோ விரும்பாமலோ 15 வயதுக்கு உட்பட்டோருடனான பாலியல் தொடர்பு கற்பழிப்பாக கருதப்படும் என்பதுடன் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

இப்புதிய விதிமுறைகளின் பிரகாரம், 11 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு ஆண்கள் மீதான வழக்குகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg