Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதித்துறையில் பாரபட்சம்: நீதிமன்றில் இருந்து வெளியேறிய சட்டத்தரணிகள்!

In இலங்கை
Updated: 09:55 GMT, Mar 7, 2018 | Published: 09:55 GMT, Mar 7, 2018 |
0 Comments
1071
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று (புதன்கிழமை) வழக்குகளில் முன்னிலையாகாது நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.

நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழலில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமின்றி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே குறித்த நடவடிக்கையை சட்டத்தரணிகள் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட 31 முஸ்லிம் இளைஞர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களான கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதே இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg