Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 09:58 GMT, Mar 7, 2018 | Published: 09:58 GMT, Mar 7, 2018 |
0 Comments
1059
This post was written by : poovannan

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான சிவில் பாதுகாப்புத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரி ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வட. மாகாண ஆளுநர் றெயினோல் குரே சந்தித்து கலந்துரையாடினார்.

அவர்களின் கோரிக்கைளை கேட்டறிந்து கொண்ட அவர், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறித்த இராணுவ உயர் அதிகாரியின் மாற்றத்தினை காலம் தாழ்த்துமாறு விடுத்த வேண்டுகோளின் பேரில் அவரின் மாற்றம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

இதன் போது சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg