Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது!

In சினிமா
Updated: 10:56 GMT, Mar 7, 2018 | Published: 10:16 GMT, Mar 7, 2018 |
0 Comments
1115
This post was written by : Vithushagan

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சிப் பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

ஷகிலா கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

இத்திரைப்படம் குறித்து ரிச்சாவின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கும் போது  மலையாள சினிமா உலகில் பல்வேறு கவர்ச்சிப் படங்களில் நடித்து 90 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஷகீலாவின் வாழ்க்கைப் பற்றிய கதையே இது.

திரைப்படத்தின் கதையம்சம் சிறப்பாக உள்ளதாகவும், அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg