Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் நுண்கடன் என்னும் பொறியில் வீழ்த்தப்படுகின்றனர் -சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

In இலங்கை
Updated: 11:30 GMT, Mar 7, 2018 | Published: 11:26 GMT, Mar 7, 2018 |
0 Comments
1111
This post was written by : poovannan

நெருக்கடியான நிலையில் இருக்கும் பெண்கள் நுண்கடன் என்னும் பொறியில் வீழ்த்தப்படுகின்றனர் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டோன்பொஸ்கோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையிலேயே அவர் இன்று (புதன்கிழமை) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “நெருக்கடியான நிலையில் இருக்கும் பெண்கள் நுண் கடன் என்னும் பொறியில் வீழ்த்தப்படுகின்றனர். நாட்டில் பெருகியுள்ள நுகர்வுக் கலாசாரம் பெண்களைமிகவும் பாதிக்கின்றது.

இந்தக் கலாசாரம் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் நுகர்வுப் பண்டங்களாகமாற்றியுள்ளது. சுதந்திர உரிமையுள்ளவளாக வாழ வேண்டிய பெண்கள் உரிமையிழந்து வாங்கவும் விற்கவும் உரிய பொருட்கள் போல ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

திறந்த பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தை ஒழித்து, தேசிய பொருளாதாரத்தையும் உயர்ந்த தேசிய கலாசாரத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே பெண்கள் சமத்துவ உரிமைபெற்று அச்சமின்றி வாழ
வழி பிறக்கும்.

பெண்களும் பெண் விடுதலையை விரும்பும் அனைவரும் இணைந்து இதற்காக போராட இத்தினத்திலே உறுதி எடுக்க வேண்டும். கலாசார கோலங்களால் அச்சமூட்டப்பட்டிருக்கும் பெண்கள் மீது சுரண்டலும் குடும்ப வன்முறையும் பாலியல் வன்முறையும் அதிகரித்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg