Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் அமேஷன் நிறுவுநர்!

In உலகம்
Updated: 11:07 GMT, Mar 7, 2018 | Published: 11:07 GMT, Mar 7, 2018 |
0 Comments
1118
This post was written by : Litharsan

முதல் முறையாக அமேஷன் நிறுவனத்தின் நிறுவுநர் ஜெப் பெஷோஸ் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்களுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. அந்த வகையில் 110 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுடன் ஜெப் பெஷோஸ் முதலிடத்தைப் பிடித்தார்.

இதுவரை முதலிடத்திலிருந்த மைக்ரொசொஃப்ட் நிறுவுநர் பில் கேட்ஸ் 90 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 2 ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டார். அத்துடன் வாரென் பஃபெட் 84 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும் 20 ஆவது இடத்திலிருந்த இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 19 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg