Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரியாரின் சிலை உடைப்பு: தொடரும் கலவரம்

In இந்தியா
Updated: 11:22 GMT, Mar 7, 2018 | Published: 11:22 GMT, Mar 7, 2018 |
0 Comments
1175
This post was written by : Kemasiya

லெனின் சிலையை போன்றே பெரியாரின் சிலையும் உடைக்கப்படும் என, எச்.ராஜா கூறியிருந்ததை தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் உள்ள குறித்த சிலை இன்று (புதன்கிழமை) உடைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் திருப்பத்தூர் பா.ஜ.க. நகரசபை செயலாளர் முத்துராமன் பிரான்சிஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் ஒரு இருசக்கர வாகனமும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் பா.ஜ.க.வின் சின்னத்தின் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டிருந்தமையினாலேயே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள பெரியார் இல்லம் மற்றும் பெரியார் சிலைக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg