Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலபாமாவில் துப்பாக்கிச்சூடு: மாணவி உயிரிழப்பு

In
Updated: 05:18 GMT, Mar 8, 2018 | Published: 05:18 GMT, Mar 8, 2018 |
0 Comments
1184
This post was written by : Suganthini

ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள அலபாமா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் 17 வயதுடைய மாணவனின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) அப்பாடசாலை மூடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் இரண்டு மாணவர்களுக்கிடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக, மேற்படி பாடசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ள அதேவேளை, துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் வேறுசில  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து எதனையும் இதுவரையில் வெளியிடாத பொலிஸார், மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அலபாமா துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg