Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வன்முறையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 05:28 GMT, Mar 8, 2018 | Published: 05:28 GMT, Mar 8, 2018 |
0 Comments
1160
This post was written by : Kemasiya

இலங்கையில் இடம்பெறும் கண்டி வன்முறையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) மாலை குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட குறித்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் பங்கேற்றிருந்தனர்.

குறித்த ஆர்பாட்டத்தின் போது, “இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு சரிவர வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் அம்பாறை பகுதியில் தொடங்கிய முஸ்லிம்-சிங்களவருக்கிடையிலான சிறு பிரச்சினை இனத்துவ பிரச்சினையாக உருவெடுத்து உயிர் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்திவருகின்றது.

நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சமூக ஊடகங்களின் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதோடு, கண்டி மாவட்டத்தில் முழுநேர ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வன்செயல் நிறுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி, மேற்குறித்தவாறு  ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg