Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூயோர்க்கில் மீண்டும் பனிப்புயல்: ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்பு

In
Updated: 05:45 GMT, Mar 8, 2018 | Published: 05:45 GMT, Mar 8, 2018 |
0 Comments
1187
This post was written by : Suganthini

அமெரிக்காவின் நியூயோர்க் நகர் மற்றும் அதனை அண்டியுள்ள மாநிலங்களிலும்; வீசிய பனிப்புயல் காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் நகரையும் அதனை அண்டியுள்ள மாநிலங்களையும் கடுமையான பனிப்புயல் நேற்று (புதன்கிழமை) மீண்டும் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் மின்விநியோகமின்றி; பாதிக்கப்பட்டதுடன், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டதுடன், 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்துகளில் தாமதம் நிலவியதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நியூயோர்க், அம்ட்ராக் (Amtrak), நியூஜெர்ஸி ஆகிய பகுதிகளிலேயே ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

மேலும், நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி ஆகிய பகுதிகளை ரிலே  சூறாவளி கடந்த வாரம் தாக்கியதைத் தொடர்ந்து, மீண்டும் நியூயோர்க்கையும் அதனை அண்டியுள்ள மாநிலங்களையும் பனிப்புயல் தாக்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg