Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய கூட்டணியில் இருந்து விலகும் தெலுங்கானா

In இந்தியா
Updated: 06:57 GMT, Mar 8, 2018 | Published: 06:57 GMT, Mar 8, 2018 |
0 Comments
1124
This post was written by : Kemasiya

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள இரு தெலுங்குத்தேச அமைச்சர்கள், தமது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லையென நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கைவிரித்தமையினால், பா.ஜ.கா.வில் உள்ள தெலுங்கு பகுதிக்கான இரு அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) தமது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

மத்திய கூட்டணியில் உள்ள அசோக் கஜபதி ராஜீ, ஓய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவருமே மேற்படி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மத்திய கூட்டணியிடம் இருந்து தெலுங்கான தேசம் வெளியேறுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது.

அப்போது சிறப்பு அந்தஸ்த்து மற்றும் சிறப்பு நிதியுதவி உட்பட 19வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நிதியுதவியை கேட்டபோது அதற்கு நிதியமைச்சர் வாய்ப்பில்லையென கைவிரித்தமையினால் தெலுங்கான பிரதேசம் விலகிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg