Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தகப்போர் தீர்வுக்கு வழிவகுக்காது – சீனா

In உலகம்
Updated: 06:46 GMT, Mar 8, 2018 | Published: 06:46 GMT, Mar 8, 2018 |
0 Comments
1139
This post was written by : Suganthini

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப்போர் எந்தவிதத் தீர்வையும் பெற்றுத்தராதென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, இருநாடுகளுக்குமிடையில் காணப்படும் வர்த்தகச் சர்ச்சை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பூகோளமயப்பட்ட உலகில் வர்த்தகப்போரை தெரிவுசெய்வது தவறான பரிந்துரையாகுமென்பதுடன், வர்த்தகப்போரை தெரிவுசெய்வது இருதரப்பினர்களுக்கும் தீமை பயக்கும் வகையில் முடிவடையும். ஆகையால், இத்தகைய நடவடிக்கைகளுக்கு நியாயமான மற்றும் அவசியமான பதிலை சீனா வழங்கும்’ என்றார்.

மேலும், ‘சீனாவும் அமெரிக்காவும் தத்தமது நாடுகளின் மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக மக்களுக்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளன. எனவே, இருதரப்பினர்களும் அமைதியான முறையில் கலந்துரையாடுவதன் மூலம் நிரந்தரத் தீர்வைக் காணலாமென்று நாம் நம்புகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றில் சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் முன்வைத்ததைத் தொடர்ந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் சற்றுக் குழப்பமான நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg