Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லட்சிய வர்த்தக உடன்படிக்கைக்கு விருப்பம் – டஸ்க்

In
Updated: 07:25 GMT, Mar 8, 2018 | Published: 07:12 GMT, Mar 8, 2018 |
0 Comments
1132
This post was written by : Suganthini

லட்சியமான வர்த்தக உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

லட்சியமானதும் மேம்பட்டதுமான வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ள அவர், பிரித்தானியக் கடற்பரப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கப்பல்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதைப் பொறுத்து அந்த உடன்படிக்கை தீர்மானிக்கப்படுமெனவும், கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் சுவரைக் கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியம் விரும்பவில்லை. ஆனால், பிரெக்சிற் என்பதன் பொருள் பிரிந்து செல்வதேயாகுமெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரெக்சிற் தொடர்பாக வெற்றி பெறக்கூடிய சாத்தியத்தை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே நிரூபிக்க முற்படுகின்றார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் அதுவல்லவெனவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg