Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌரவக் கொலைக்கு எதிராக புதிய சட்டம்: மத்திய அரசு தகவல்

In இந்தியா
Updated: 08:14 GMT, Mar 8, 2018 | Published: 08:14 GMT, Mar 8, 2018 |
0 Comments
1128
This post was written by : Kemasiya

கௌரவக் கொலையை திட்டமிட்ட கொலையாக கருதும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கௌரவக் கொலைக்கு எதிராக சக்தி வாகினி என்னும் தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதற்கு பதில் வழங்கிய மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது.

திருமண உறவுக்கான சுதந்திரத்தில் பிறர் தலையீட்டை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

சட்டம் ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த சட்டமூலம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் பொலிஸ் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம்.

காதல் ஜோடிகளை பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைத்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பொலிஸார் பாதூக்க வேண்டும்.

காதல் ஜோடிகளின் முறைப்பாடுகளை பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் மேற்குறித்த சட்டமூலம் விரைவில் அமுல்படுத்தப்படும்” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கௌரவக் கொலையினால் மனித உரிமை மீறப்படுவதாகவும், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இடம்பெறுகின்றது எனவும் கூறி சக்தி வாகினி என்ற தன்னார்வ அமைப்பு மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg