Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பனிப்பொழிவு: சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

In
Updated: 08:10 GMT, Mar 8, 2018 | Published: 08:10 GMT, Mar 8, 2018 |
0 Comments
1143
This post was written by : Suganthini

வேல்ஸின் சில பகுதிகளில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வேல்ஸில் 6 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுமென்பதுடன், விபத்துகளும் சம்பவிக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆகவே, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென, சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏ.487 மற்றும் ஏ.55 வீதிகளூடனான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, வேல்ஸில் சுமார் 83 பாடசாலைகள் பனிப்பொழிவைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) மூடப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg