Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வோர்னரை கடித்துக் குதறும் நாயாக ஊக்குவிக்கின்றனர்: இயன் சேப்பல் ஆவேசம்

In கிாிக்கட்
Updated: 08:48 GMT, Mar 8, 2018 | Published: 08:48 GMT, Mar 8, 2018 |
0 Comments
1189
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய அணியினர் டேவிட் வோர்னரை கடித்துக் குதறும் நாயாக ஊக்குவிப்பதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் மற்றும் டேவிட் வோர்னருக்கிடையிலான வாய்த்தர்க்கம் தற்போது கைகலப்பு வரையில் சென்றுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வோர்னரை ஊக்குவிப்பவர்களையும் தடை செய்வதை நான் விரும்புகிறேன். இவ்வாறாக வலுவான நடவடிக்கை எடுத்தால் இத்தகைய நடவடிக்கையை அனுமதிப்பவர்களும் திருந்துவார்கள், போட்டியும், களமும் கொஞ்சம் தெளிந்த மனநிலையில் இருக்கும். மேலே இருப்பவர்களின் முட்டாள்தனங்களுக்கு வீரர்கள் இரையாகிறார்கள். வோர்னரை எப்போதும் கடித்துக் குதறும் நாயாக மேலே உள்ளவர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

களத்தில் நடக்கும் இத்தகைய மோசமான செயல்களுக்கு அணித்தலைவரே பொறுப்பு என்கிறது விதிமுறைகள். எனவே ஸ்டீவ் ஸ்மித் இதனைத் தடுக்கவில்லை எனும்போது அவரும் இதற்குக் ஒத்துழைப்பே வழங்குகின்றனர். நான் 15 ஆண்டுகாலமாகக் கூறி வருகிறேன், களத்திலோ வெளியிலோ வீரர்களிடையே கைகலப்பில் போய் இது முடியும். அன்று வோர்னருக்கும் டிக்கொக்குக்கும் இடையே அத்தகைய சூழல் ஏற்பட்டது. கொதிப்படையும் போது நிச்சயம் தனிப்பட்ட முறையில் ஏதாவது கூறுவதுதான் நிகழும்.

எவ்வளவு முட்டாள்தனம், தென்னாபிரிக்க வீரர் ரபாடா தடை செய்யப்படுவதற்கு அருகில் இருக்கிறார் என்பதற்காக அவரை குதறுவோம் என்று அவுஸ்ரேலிய வீரர்கள் கூறியதாக படித்தேன். இது என்ன போக்கு? டெஸ்ட் போட்டிக்கு முன்பே இவ்வாறு கூறும்போது அதிகாரிகள் இரு அணித் தலைவர்களையும் கூப்பிட்டு பேசியிருக்க வேண்டும். இது பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் யார் எல்லை மீறினாலும் அணித்தலைவர் உட்பட தடை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்க வேண்டும்.

எதிரணி வீரர்களை விளையாட விடாமல் தொந்தரவு செய்தல் தகாது, நகைச்சுவை இருக்கலாம் ஆனால் அது எல்லை மீறக்கூடாது, வாய்த்தர்க்கம் தான் ஒரு வீரரை வீழ்த்தும் என்றால் உங்கள் பந்துவீச்சாளர்கள். எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த தகுதியற்றவர்களா?” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg