Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டது

In இந்தியா
Updated: 10:44 GMT, Mar 8, 2018 | Published: 08:43 GMT, Mar 8, 2018 |
0 Comments
1303
This post was written by : Kemasiya

தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆறு மாவட்டங்களில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அன்பளகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“எதிர்வரும் 15ஆம் திகதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவை கூடவிருப்பதால், மார்ச் மாதம்  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை, திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளுர், காஞ்சிபுரம்  ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவிருந்த கள ஆய்வுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் மீண்டும் எப்போது என்பது தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் உள்ள தி.மு.க. தொண்டர்களை சந்தித்து அம் மாவட்டங்கள் தொடர்பில் ஸ்டாலின் தலைமையிலான கள ஆய்வு நடத்தப்படவிருந்து.

இந்நிலையில் குறித்த ஆய்வுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg