Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடர் ஆரம்பமாவதற்கு நூறு நாட்கள்: சோச்சியில் முக்கிய நிகழ்வு

In உதைப்பந்தாட்டம்
Updated: 10:24 GMT, Mar 8, 2018 | Published: 10:24 GMT, Mar 8, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சரியாக நூறு நாட்கள் உள்ளதனை எடுத்து உணர்த்தும் வகையில் ரஷ்யாவின்  சோச்சி நகரில் நேற்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது டொல்பின்களை பயன்படுத்தி உலக கிண்ண காற்பந்தாட்ட தொடர் இன்னும் 100 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்பாட்டாளர்கள் உலகிற்க்கு எடுத்துக்காட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற டொல்பின்கள் காற்பந்துகளை கௌவிக்கொண்டும், ஏந்திக்கொண்டும் நீரில் நீந்நிச் சென்றமை இரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் போட்டிகளில் கோல் அடிப்பதனை போன்ற சாகசங்களிலும் டொல்பின்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இவ்வாறு இந்த கால கணக்கெடுப்பு உலக கிண்ண காற்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகும் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை காண ஏராளமான கால்பந்தாட்ட இரசிகர்கள் வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் தமது கைகளில் ரஷ்ய தேசிய கொடியை ஏந்தியிருந்தனர்.

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடர் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg