Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்.எச்.370 விமானம் காணாமற்போய் 4 வருடங்கள் பூர்த்தி: சீனாவில் மனு கையளிப்பு

In உலகம்
Updated: 09:56 GMT, Mar 8, 2018 | Published: 09:56 GMT, Mar 8, 2018 |
0 Comments
1183
This post was written by : Suganthini

மலேசியாவுக்குச் சொந்தமான எம்.எச்.370 விமானம் காணாமற்போய் 4 வருடங்களாகியுள்ள நிலையில், அவ்விமானத்தில் பயணித்தவர்களின் நிலைமை தொடர்பாக தமக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென, அவ்விமானத்தில் பயணித்த சுமார் 30 பேரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட எம்.எச்.370 விமானம் காணாமற்போய் இன்றுடன் (வியாழக்கிழமை) 4 வருடங்களாகியுள்ளன.

இந்நிலையில், சீன வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அமைச்சிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளதுடன், காணாமற்போன விமானத்தில் பயணித்த தமது உறவினர்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

தமது கோரிக்கையை வெளிவிவகார அமைச்சு செவிசாய்த்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், எம்.எச்.370 விமானத்தில் பயணித்த பயணிகள் உயிரிழந்துள்ளனரென்பதை ஏற்றுக்கொள்ளாத சிலர், விமானத்தில் பயணித்த தமது உறவினர்கள் சதித்திட்டத்துக்கு ஆளாகியிருக்கலாமெனவும், நம்புகின்றனர்.

எம்.எச்.370 விமானத்தைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும், அவ்விமானம் தொடர்பாகவோ, அவ்விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்பாகவோ இதுவரையில் எதுவித தகவலும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg