Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலைகளை உடைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

In இந்தியா
Updated: 10:22 GMT, Mar 8, 2018 | Published: 10:22 GMT, Mar 8, 2018 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்கள் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜப்பேட்டையில் இன்று (வியாழக்கிழமை) மகளிர் தின விழாவொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை உடைக்க யார் முற்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்து அவர் கூறவில்லை எனவும், அது அவரின் உதவியாளர் ராஜாவிற்கு தெரியாமல் பதிவு செய்ததாகவும் கூறி ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் சிலைகள் உடைக்கப்படும் என்பது கண்டனத்திற்குரியது” எனக் கூறினார்.

இதேவேளை தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்ற ரஜினிகாந்தின் கருத்திற்கு பதில் வழங்கிய அவர், “தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. எம்.ஜி.ஆர் தொடக்கிய அ.தி.மு.க. அம்மா கட்டியெழுப்பிய கட்சியை இன்று அவர்கள் வழியில் செயற்படுத்துகிறோம்.

மக்களுக்கு ஏற்ற சிறந்த ஆட்சியை எந்தவிதத்திலும் குறைவின்றி நடத்தி வருகிறோம்” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg