Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்தில் புதிய நாணயத்தாள்களை வெளியிடும் நிகழ்வு

In உலகம்
Updated: 10:41 GMT, Mar 8, 2018 | Published: 10:41 GMT, Mar 8, 2018 |
0 Comments
1141
This post was written by : Suganthini

தாய்லாந்தில் புதிய நாணயத்தாள்களை வெளியிடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

மன்னர் புகுமிபோல் அடூல்யாடேஜின் (Bhumibol Adulyadej.) மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பரில் சிம்மாசனம் ஏறிய தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொங்கோர்னின் (Maha Vajiralongkorn) உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள்களே வெளியிடப்படவுள்ளன.

தாய்லாந்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 6ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சக்ரி (Chakri) ஞாபகார்த்த தினத்திலும், மன்னர் மகா வஜிரலொங்கோர்னின் பிறந்ததினமான எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதியும் மேற்படி நாணயத்தாள்கள் இரண்டு கட்டங்களாகப் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதற்கட்டமாக 20 பாஹ்த் (baht) 50 பாஹ்த், 100 பாஹ்த் நாணயத்தாள்களும் இரண்டாவது கட்டமாக 500 பாஹ்த், ஆயிரம் பாஹ்த் நாணாயத்தாள்களும் புழக்கத்துக்கு விடப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg