Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் கிளர்ச்சியான அரசியலை தவிர்க்க வேண்டும்: தமிழிசை

In இந்தியா
Updated: 11:12 GMT, Mar 8, 2018 | Published: 11:12 GMT, Mar 8, 2018 |
0 Comments
1137
This post was written by : Kemasiya

தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் கிளர்ச்சியான அரசியல் நிறுத்தப்பட்டு வளர்ச்சி பாதை நோக்கி செல்ல முற்பட வேண்டும் என, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த தமிழிசை,

“அண்ணன் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் நான் கூறவிரும்புவது, எந்த நிலையிலும் கிளர்ச்சியை விடுத்து வளர்ச்சியை நோக்கி பயணியுங்கள்.

எதிர்க்கொள்கை உள்ளவர்கள் இருந்தாலும், கொள்கை மாறுபாடுடையவர்களாக இருந்தாலும், முன்னாள் தலைவர்களின் சேவைகளை மறுக்க முடியாது.

எனவே சிலைகளை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. எந்த சிலையாக இருந்தாலும் அதை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

எச். ராஜா முகநூலில் பதிவிட்ட கருத்து தன்னுடையது அல்ல எனக் கூறிய பின்னர் அவரின் கருத்தை விமர்சிப்பது தவறு.

சிலைகளை உடைத்து, எமது கட்சியை சேர்ந்தவர்களை நாம் பதவியில் இருந்து நீக்கினோம். அதே போன்று ஏனைய கட்சிகளும் வன்முறையில் ஈடுபடபவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அவர்  மேலும்   தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg