Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்பப் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனா வலியுறுத்து

In உலகம்
Updated: 10:58 GMT, Mar 8, 2018 | Published: 10:58 GMT, Mar 8, 2018 |
0 Comments
1137
This post was written by : Suganthini

கொரிய தீபகற்பப் பிரச்சினையைத் தீர்க்க அனைத்துத் தரப்பினர்களும் முன்வர வேண்டுமென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தென்கொரியாவில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்போட்டியைத் தொடர்ந்து, இரு கொரியாக்களுக்கிடையிலும் உறவு மேம்பட வழிவகுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்துக்கொண்டு கொரிய தீபகற்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று நாம் நம்புகின்றோம்’ என்றார்.

எனவே,  ‘கொரியதீபகற்பப் பிரச்சினையைத் தீர்க்க சீனா எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg