Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறையை தூண்டியவர்களின் விபரம் விரைவில்! – சபாநாயகர் தகவல்

In இலங்கை
Updated: 12:16 GMT, Mar 8, 2018 | Published: 12:16 GMT, Mar 8, 2018 |
0 Comments
1274
This post was written by : Varshini

நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்ட சபாநாயகர், அது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் சபையில் வெளிப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

இதேவேளை, நாட்டின் அமைதியை பேணுவதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றதென்றும் சபாநாயகர் கரு குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg