Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறைகளை தடுக்க பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினரை இணையுங்கள்: ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Updated: 14:36 GMT, Mar 8, 2018 | Published: 13:23 GMT, Mar 8, 2018 |
0 Comments
1314
This post was written by : Varshini

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸாரும் ராணுவத்தினரும் வேடிக்கை பார்த்ததாகவும், சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு, பொலிஸ் மற்றும் ராணுவத்தில் விகிதாசார ரீதியில் சிறுபான்மையின மக்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மதுவரி திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, கண்டி சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் அனைவருக்கும் சமமான முறையில் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்திய ஹிஸ்புல்லாஹ், அதனை சரியாக நடைமுறைப்படுத்தாத வரையில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதென குறிப்பிட்டார். குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 25 பள்ளிவாசல்களும், சுமார் 200இற்கும் மேற்பட்ட வீடுகளும், நூறிற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதென்றும், இவற்றை கருத்திற்கொண்டு வன்முறையை தூண்டிவிட்டவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg