Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி வன்முறை சம்பவங்களை மஹிந்த அணியுடன் தொடர்பு படுத்த முயற்சி!

In இலங்கை
Updated: 14:34 GMT, Mar 8, 2018 | Published: 14:34 GMT, Mar 8, 2018 |
0 Comments
1343
This post was written by : Anojkiyan

கண்டி வன்முறை சம்பவங்களை மஹிந்த அணியுடன் தொடர்பு படுத்த அரசாங்க தரப்பு அமைச்சர்கள் முயற்சி செய்வதாக லங்கா சமசமாஜக் கட்சி தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

லங்கா சமசமாஜக் கட்சி இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கண்டி வன்முறை சம்பவங்களுடன் எதிர்கட்சிகளுக்கு குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு தொடர்பிருப்பதாக அரசாங்க தரப்பு அமைச்சர்கள் காட்ட முயற்சிக்கின்றனர்.

இது குறித்து நான் கவலை கொள்கிறேன். அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை. இந்த பிரச்சினையைக் கொண்டு அரசியல் லாபம் தேடவே அவர்கள் முயற்சிக்கின்றார்கள். இந்த இடத்தில் சகல அரசியல் சக்திகளும் நாடு குறித்தும், மக்கள் குறித்தும் சிந்தித்து, எரியும் நெருப்பை அணைக்க ஓரணயில் இணைய வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg