Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 16:53 GMT, Mar 8, 2018 | Published: 14:44 GMT, Mar 8, 2018 |
0 Comments
1273
This post was written by : Vithushagan

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை சுமத்திராராம வீதியில் பிலிங் வத்தையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பழ வியாபாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வீட்டுக்கு அருகில் உரையாடிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர்  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த, சமந்த பிரதீப், மிலான் மதுசங்க, ஜயரத்ன ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த பகுதி கடும் பாதுகாப்பு வழங்கபட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து கொண்டாஞ்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg