Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கின் பெருஞ்சமர்: முதல் நாள் ஆட்டம் நிறைவு

In கிாிக்கட்
Updated: 15:32 GMT, Mar 8, 2018 | Published: 15:31 GMT, Mar 8, 2018 |
0 Comments
1131
This post was written by : Anojkiyan

வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரிகளுக்கிடையிலான 112ஆவது வருட மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இன்றைய (வியாழக்கிழமை) முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் அரம்பமான இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் யாழ். பரியோவான் கல்லூரி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வியாஷகாந்த் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜெயதர்ஷன் 19 ஓட்டங்களுடனும், நிஷான் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடுகின்றனர்.

பந்து வீச்சில் யாழ். பரியோவான் வீரர் கபில் ராஜ் ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி அணி 77.1 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் செரூபன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 65 ஒட்டங்களை பெற்றுக் கொடுக்க, எல்சான் 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பில் எலையளமயவொ – 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கட்டுக்களையும், தலைவர் தசோபன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முவில் ஒரு விக்கெட்டினை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg