Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா விஜயம்

In இந்தியா
Updated: 03:28 GMT, Mar 9, 2018 | Published: 03:28 GMT, Mar 9, 2018 |
0 Comments
1131
This post was written by : Litharsan

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன் அரச முறைப் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நான்கு நாள் சுற்றுப்பயணத்தில் அவரது பாரியாரான மேரி கிளாட் மென்ரானும் வருகைதரவுள்ளார்.

நாளைய தினம் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ள அவர், 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் சந்திப்பினை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கிலும் பங்குபற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அணுசக்தி ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, விண்வெளி, தீவிரவாதம், பருவநிலை மாற்றங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் பல்துறைசார் விடயங்கள்தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இம்மானுவல் மெக்ரன் முதல்முறையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg